கடுகு

செப்டம்பர் 19, 2008

ஊடகங்களின் சமூகப் பொறுப்புணர்வு….

நேற்று காலை (18-09-2008) தினமலர்.காம் தளத்தை திறந்தவுடம் முதலில் கண்ட செய்தி : "ஐசிஐசிஐ வங்கி திவாலானதாக வதந்தி, (தூத்துக்குடி அருகிலுள்ள) ஒரு ஊரில் வங்கிக் கிளைகள் மற்றும் தானியங்கி பணவழங்கிகள் முற்றுகை"

மதியம் தளத்தைப் பார்க்கும் போது அந்த செய்தி இல்லை. தேடிப்பார்த்தும் அதன் சுவடே இல்லை. அனேகமாக வங்கியிலிருந்து வேண்டுகோள் வந்திருக்கும், உடனடியாக வெளியிட்ட செய்தியைத் தூக்கி விட்டிருக்கின்றனர். அச்சம்பவம் உண்மை என்றே இணையத் தேடலில் தெரிந்தது. ஆக உண்மையான ஒரு சம்பவத்தை மூடி மறைக்க முயல்கின்றனர்.

இதற்குப் பின் சில மாதங்கள் முன்பு எழுதி பதிவேற்றப்படாத ஒரு பதிவு நினைவுக்கு வந்தது. கீழே..........

ஊடகங்கள் தங்களுக்கான த‌ர்ம‌ம் ப‌ற்றி பேசுகின்றன, தமது ஊடகத்தினர் தாக்க‌ப்ப‌டும் போது கூக்குர‌லிடுகின்ற‌ன. ஆனால், இவ‌ர்க‌ள் நெறிப்ப‌டி ந‌ட‌ந்து கொள்கின்ற‌னரா?....

அனைத்துமே வணிக நோக்கம் என்றாலும், கொஞ்சமாவது சமூக பொறுப்புணர்வு இருத்தல் வேண்டாமா என்ன?

ஒரு பத்திரிகை ஒரு தலைப்பட்சமாக செய்தி வெளியிடுகிறது என்பதெல்லாம் முன்பு முணுமுணுக்கப்பட்ட வார்த்தைகள். பல பத்திரிகைகளை கட்சிகளே நடத்துகின்றன. அல்லது ஏதாவது ஒரு கட்சிக்கு அல்லது ஆளுங்கட்சிக்கு ஒத்து ஊதும் வேலையைத்தான் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. இது மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்தாலும் இவற்றைத்தான் ர‌சித்துக் கொண்டிருக்கின்றனர்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று நமது அரசியல் தலைவர்கள் வீதிகளிலும் அறிக்கைகளிலும் வெட்டி முழக்கம் இடுவர். அந்த பிதற்றல்களை நமது பத்திரிகைகளும் வரிந்து கட்டிக் கொண்டு முதல்பக்க செய்தியாக வெளியிடும்.

(அரசியல்வாதிகள் தமிழுக்கு என்றுமே முதலிடம் தரப்போவதில்லை. எல்லாம் வெத்து வேட்டுப் பேச்சுக்கள்தான் என்பது சற்று தமிழக அரசியலை நோக்கினால் தெரியும். இவர்களால் தமிழ் வளராவிட்டாலும் பரவாயில்லை, சாகாமல் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு வந்து விட்டது. சென்னை பண்பலை வானொலியின் பெயர் : ரெயின்போ, அரசு மதுக்கடையின் பெயர் : டாஸ்மாக்)

அரசியல்வாதிகள் தமிழை எந்த விதத்திலும் வளர்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட பெரும்பாலான பத்திரிகைகளுக்கு அருகதையில்லாமல் போய் விட்டது.

தினமலரில் சில பகுதிகளின் தலைப்புகள் : டீ கடை பெஞ்ச், கோர்ட், டவுட் தனபாலு, காலண்டர், ஷாப்பிங்.....

'நம்பர் ஒன் நம்பர் ஒன்' என்று கக்கூசைத் தேடுகிறது தினகரன்.

'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்' என்கிறது இன்னொன்று, இது இவர்களின் மொழியிலேயே சொல்வதானால் 'வேஸ்ட் கண்ணா வேஸ்ட்'

விஷூவல் டேஸ்ட், டயலாக் என்று தான் தலைப்புகள் இருக்கும்.

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு என்று தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஆரம்பமான ஊடக விளக்கங்கள், மக்களுக்கு பாதிப்படையாமல் தவறு செய்ய வழி உள்ளது என்று விளம்பரமிட்டு கலாச்சார சீர்கேட்டுக்குத்தான் வித்திட்டன.

நமுத்துப் போன 'பெண் உரிமை' பற்றி எழுதிக்களைத்து விட்ட ஊடகங்கள், பெண்களை துகிலுரித்து, உரித்த கோழி கடையில் தொங்குவது போல படமிட்டு விற்றுக் கொண்டிருக்கின்றன. எந்த‌ ந‌டிகையின் தொப்புள் இது என்று போட்டி வைத்து ம‌க்க‌ளின் கீழான‌ ர‌சனைக்குத் தீனி போட்டு கலைச்சேவை செய்கின்றன‌.

முன்பு இதழ்களில் நடுப்பக்கத்தில் மட்டும் கவர்ச்சியாக ஒரு படம் வரும். சில வீடுகளில் வீட்டுத்தலைவர் நடுப்பக்கத்தை கிழித்து எறிந்து விட்டே புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டு வருவார். மக்கள் கட்டுப்பாட்டுடனே இருந்தனர். தமது எல்லையை அறியாத ஊடகங்களே அந்த கட்டுப்பாட்டைத் தகர்த்து மக்கள் மனதில் நஞ்சை வித்திட்டு பயிரிட்டு விட்டன்ர். வித்திடப்பட்டவைகளின் அறுவடைகள் தான் இன்றைய எய்ட்ஸ் பாதிப்பு, பணமே பிரதானம் என்ற எண்ணங்கள், குடும்பத்தில் பிரச்சினைகள், மணமுறிவுகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், கொலை, கொள்ளை ஆகியவை.

திரைத்துறைக்கு தமிழகத்தை அடிமையாக்கியதில் பெரும்பங்கு தொலைக்காட்சிகளுக்கே. திரைப்ப‌ட‌ங்களை மைய‌மாக‌க் கொண்டே தொண்ணூறு ச‌த‌விகித‌ தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ள் அமைக்கப்படுகின்ற‌ன‌.

அந்தரங்கம், புனிதம் என்ற பெயர்களில் பாலியல் செய்திகளை இலைமறை காய்மறையாகக் கொண்டு வந்து எப்படி உடலுறவு கொள்வது என்று பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விவாதித்து முடித்து விட்டனர். இப்போது 'எனக்கும் என் ஒன்று விட்ட தம்பிக்கும் இடையே தொடுப்பு உள்ளது, இதை எப்படி நிறுத்துவது?' என்று ஆலோசனை கேட்பது போன்ற கடிதங்களும் அவற்றுக்கு பதில்களும் மலிந்து விட்டன.

ம‌க்க‌ளின் வ‌க்கிர‌மான‌ உண‌ர்வுக‌ளையும், கீழ்த்த‌ர‌மான‌ ஆசைக‌ளையும் தூண்டி விட்டு அந்த‌ நெருப்பில் பணமீட்டி குளிர்காயவே இது மாதிரியான நிகழ்ச்சிகளும் வெளியீடுகளும்.

சீர்கேடுகள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் இருக்கின்றன. கள்ளத் தொடர்புகளும் முறை தவறிய உறவுகளும் ஆதியிலிருந்தே இருக்கின்றன. அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவுகள் ஆபத்தானவை. ஆந்திராவில் சில மாதங்கள் முன் இரு ஆண்களுக்கு அவர்களின் பெற்றோரே திருமணம் செய்து வைத்திருக்கின்றனர், காரணம் - ஓரினச்சேர்க்கை.

எல்லாம் செய்து குட்டிச்சுவராக்கி விட்டு, நாட்டு நடப்பு கேவலமாகி விட்டது, மக்களுக்கு இதெல்லாம் இருந்தால் தான் பிடிக்கிறது, நாங்கள் ஜனரஞ்சக பத்திரிகை, டிஆர்பி ரேட்டிங் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கதை சொல்வார்கள்.

10 மறுமொழிகள் »

  1. உங்கள் உள்ளத்தில் இருப்பதை அப்படியே வெளியிட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

    Comment by Share point the Great — செப்டம்பர் 19, 2008 @ 1:20 பிற்பகல் | பதில்

  2. ம்க்கள் திருந்த மாட்டேங்கராங்களே தலைவா. பால் அபிசேகம் பண்ணினவங்க இப்போ பீர் அபிசேகம் செய்யராங்க, இவங்கள என்ன பண்ண?

    Comment by Narendran — செப்டம்பர் 19, 2008 @ 1:49 பிற்பகல் | பதில்

  3. எல்லாம் பணம் பண்னும் வேலை

    Comment by v. sakthivel — செப்டம்பர் 19, 2008 @ 7:24 பிற்பகல் | பதில்

  4. தினமலத்தின் பொறுப்பற்ற தன்மையை நடுநிலையாளர்கள் இப்போது உணர்ந்து கொண்டு புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர்.

    Comment by masdooka — செப்டம்பர் 19, 2008 @ 9:36 பிற்பகல் | பதில்

  5. கடுகு -
    மக்களிடம் பொதுவாகக் காணப்படும் இரட்டை நிலைப்பாட்டை (hypocrisy) நன்றாகவே விளம்பியுள்ளீர்கள். ஊடகங்கள் இருக்கட்டும் முதல் நம்மை நாம் சுய பரிசோதனை செய்வோம்.

    மேற்கோளாக சில வரிகள்:
    //முன்பு இதழ்களில் நடுப்பக்கத்தில் மட்டும் கவர்ச்சியாக ஒரு படம் வரும். சில வீடுகளில் வீட்டுத்தலைவர் நடுப்பக்கத்தை கிழித்து எறிந்து விட்டே புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டு வருவார்//
    சில என்ற வார்த்தையை கவனிக்கவும். இதற்கு அடுத்த வரி என்ன?
    //மக்கள் கட்டுப்பாட்டுடனே இருந்தனர்.//
    சிலர் தானே கிழித்து எறிந்து விட்டனர். ஒரு வேளை அவர்கள் சாமியாரோ? தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக கயவர்கள் எனலாம். இதில் கட்டுக்கோப்பு எங்குள்ளது ? பெண்ணின் உடலை விரும்பாத ஆண் இருந்தால் நீங்கள் சொல்வது சரி. கிளர்ச்சியூட்டும் விதம் பத்திரிக்கை படம் போடுமே என்றால் அப்பத்திரிக்கையை வாங்காமல் இருப்பது தானே கட்டுக்கோப்பு.

    //ஆந்திராவில் சில மாதங்கள் முன் இரு ஆண்களுக்கு அவர்களின் பெற்றோரே திருமணம் செய்து வைத்திருக்கின்றனர், காரணம் – ஓரினச்சேர்க்கை.//
    ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாளன் நான் அல்ல. இருப்பினும் வாழ் வாழவிடு என்ற கொள்கையில் ஏற்புடையவன். அது அவர் வாழ்க்கை அவர்கள் வாழட்டும்.

    Comment by bmurali80 — செப்டம்பர் 19, 2008 @ 11:18 பிற்பகல் | பதில்

  6. அருமையான பதிவு, நேற்று குமுதம் இதழில் சென்னையில் லிவிங் டுகதர், அதாவது திருமணத்திருக்கு முன்பே தாலிகட்டாமல் ஒன்றாக வாழும் கலாச்சாரத்தை பற்றிய கட்டுரை, முடிவில் டாக்டர் ஷாலினி இதற்கு முழுக்க முழுக்க காரணம் ஆண்கள் மட்டுமே என்று சொன்னது அவளுடைய பெண்ணாதிக்க புத்தியைத்தான் காட்டியது.

    Comment by Sarathy — செப்டம்பர் 19, 2008 @ 11:39 பிற்பகல் | பதில்

  7. நன்றி : Sharepoint the Great, Narendran, V.Sakthivel, Masdooka, bmurali80, Sarathy.

    \\bmurali80//

    நன்றி முரளி : எல்லோரும் யோக்கியர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஒழுங்காக இருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள ஊடகங்கள் இப்படிச் செய்யலாமா? முன்பு நடுப்பக்கத்தில் மட்டுமே வெளி வந்து கொண்டிருந்த கில்மா படங்கள் இன்று பத்திரிகைகள் முழுவதும் விரவிக் கிடப்பதற்கு யாரை நோவது?

    \\சிலர் தானே கிழித்து எறிந்து விட்டனர். ஒரு வேளை அவர்கள் சாமியாரோ? தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக கயவர்கள் எனலாம். இதில் கட்டுக்கோப்பு எங்குள்ளது ? //

    அவர்கள் கவர்ச்சிப்படத்தைக் கிழித்து எறிந்து விட்டு வீட்டுக்கு கொண்டு செல்வது, அவர்கள் குழந்தைகள் மனம் கெடக்கூடாது என்று தான். புரியவில்லையா உங்களுக்கு? கட்டுக்கோப்புத்தனம் தான் அது. கயமை எங்கிருந்து வந்தது இங்கு?

    ஓரினச் சேர்க்கை : எந்த இழவோ எங்கோ நடக்கட்டும், அதை வெளிச்சமிட்டு அதீத முக்கியத்துவம் அளிப்பதால் தானே சமூகம் கெடுகிறது. இதைத்தான் நான் சொல்லியுள்ளேன். ஒவ்வொருவ‌ருக்கும் க‌ருத்து வேறுப‌டும். பேசிக்கொண்டே போக‌லாம்….. ந‌ண்ப‌ரே

    Comment by கடுகு — செப்டம்பர் 20, 2008 @ 12:14 பிற்பகல் | பதில்

  8. mmmmmm….. Accept your opinion about the attitude of medias.

    Comment by kadaisipakkam — செப்டம்பர் 28, 2008 @ 5:07 பிற்பகல் | பதில்

  9. ஓரினச்சேர்க்கையால் சமூகம் கெடுகிறதாம். மனிதன் உருவானபோது(உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால்) எந்த நாகரீகமும் கிடையாது, கலாச்சாரமும் கிடையாது. சாதி, மத, இன வேற்றுமைகள் கிடையாது.ஆடை கூட கிடையாது. நாடு, சட்டம், மொழி, இனம், சண்டை, சச்சரவு என அத்தனை இழவுகளும் மனிதனால் உருவாக்கப்பட்டது தான். என்னைப் பொருத்தவரை அடுத்தவருக்கு தீங்கிழைக்காத எந்த தனி மனித செயலும் கலாச்சாரம் என்ற போலித்தனத்தால் தடுக்கப்படத்தேவையில்லை. தனிமனித சுதந்திரம் தான் முதன்மையானது. இன்னும் விரிவாகச் சொல்வதானால் அடுத்தவரின் மூக்கு நுனி வரைதான் உங்கள் சுதந்திரம்

    Comment by ஆனந்தன் — ஜூலை 2, 2009 @ 5:18 பிற்பகல் | பதில்

  10. ஓரினச்சேர்க்கையால் சமூகம் கெடுகிறதாம். மனிதன் உருவானபோது(உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் கடவுளால் படைக்கப்பட்டபோது) எந்த நாகரீகமும் கிடையாது, கலாச்சாரமும் கிடையாது. சாதி, மத, இன வேற்றுமைகள் கிடையாது.ஆடை கூட கிடையாது. நாடு, சட்டம், மொழி, இனம், சண்டை, சச்சரவு என அத்தனை இழவுகளும் மனிதனால் உருவாக்கப்பட்டது தான். என்னைப் பொருத்தவரை அடுத்தவருக்கு தீங்கிழைக்காத எந்த தனி மனித செயலும் கலாச்சாரம் என்ற போலித்தனத்தால் தடுக்கப்படத்தேவையில்லை. தனிமனித சுதந்திரம் தான் முதன்மையானது. இன்னும் விரிவாகச் சொல்வதானால் அடுத்தவரின் மூக்கு நுனி வரைதான் உங்கள் சுதந்திரம்

    Comment by ஆனந்தன் — ஜூலை 2, 2009 @ 5:19 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.