கடுகு

செப்டம்பர் 9, 2008

பதிவுத் திருடர்கள்

சில மாதங்கள் முன் நான் எழுதிய “மலைநாட்டு மச்சான்கள்” என்ற பதிவு வெயிலான் என்பவரது தளத்தில் காட்டப்பட்டிருந்தது. வெயிலான், இது வேறு எவரோ (தென்பாண்டியன்) எழுதியதாக உறுதியின்றி குறிப்பிட்டுள்ளார்.

http://www.kadugu.com/Katturai/Malaiyali.htm

அந்த பதிவு நெத்தியடியாக இருப்பதாகவும், ஒற்றுமை விரும்பிகளுக்கு வருத்தமூட்டுவதாகவும் பல மின்னஞ்சல்கள் வந்தன. சில நாட்களிலேயே அதை நீக்கி விட்டு கடுகு முதன்மைத் தளத்தில் முதல் பக்கத்தில் பார்வைக்கு அப்பதிவை இணைத்து விட்டேன். அது ஸ்கிரீன்ஷாட்டாக எடுக்கப்பட்டு, தளத்தின் பெயர் மறைக்கப்பட்டு எனக்கே சில முறை ஃபார்வர்ட் மின்ன்னஞ்சலாக வந்தது.

இது குறித்து மேலும் ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எனக்கு நேரமில்லாததால் தான் இரண்டு மாதங்களாக பதிவிட இயலவில்லை. இவ்வளவு நேரமின்மையிலும் எழுதும் எழுத்துக்கள் திருடப்படும்போது எவ்வளவு வருத்தமும் வயிற்றெரிச்சலும் ஏற்படும் என்று பதிவுத் திருடர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்

இது போல பலமுறை எனது நையாண்டி விலாஸ் பதிவுகள் திருடப்பட்டிருக்கின்றன.

ப‌திவுத் திருட‌ர்க‌ளே……….

ப‌திவு ந‌ன்றாக‌ இருந்தால் அதை நீங்க‌ள் சொந்த‌மாக்கிக் கொள்ள‌ முடியாது, உங்க‌ள‌து என்று காட்டிக் கொண்டாலும் குட்டு ஒரு நாள் வெளிப்ப‌டும். ப‌திவுக்கான‌ சுட்டியையோ அல்ல‌து ஸ்கிரீன் ஷாட்டையோ வேறெவ‌ருக்கும் அனுப்பினால் கூட‌ எழுதிய‌வ‌ரின் பெய‌ர் மற்றும்/அல்லது த‌ள‌ முக‌வ‌ரியை நாக‌ரீக‌த்தின் பொருட்டு குறிப்பிடுங்க‌ள்.

15 மறுமொழிகள் »

  1. கவுண்டமணி சொல்லுவார் – ‘இதெல்லாம் அரசியல்ல சகசம்பா’

    ஆனால் வலையுலகிலும் இதையேதான் காணமுடிகிறது.

    நான் எனது பதிவுகளில் இருந்த சுட்ட பதிவுகளை நீக்கிவிட்டு நிம்மதியுடன் திரிகிறேன்.

    Comment by tamilnenjam — செப்டம்பர் 10, 2008 @ 10:58 மு.பகல் | பதில்

  2. நன்றி தமிழ்நெஞ்சம்.

    Comment by கடுகு — செப்டம்பர் 10, 2008 @ 11:21 மு.பகல் | பதில்

  3. யாராவது புதிய ஆளாக இருப்பார்கள்!
    சொல்லிப் பாருங்கள் திருந்த வாய்புண்டு

    Comment by வால்பையன் — செப்டம்பர் 10, 2008 @ 11:31 மு.பகல் | பதில்

  4. உங்கள் பதிவுகள் திருடப்படுகின்றது என்றால் நீங்கள் வலைப்பதிவுலகில் மிகவும் பாப்புலர் ஆகிவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம். இதில் கவலைப்படவேண்டாம் என்பது எனது சொந்தக் கருத்து.

    Comment by tamilnenjam — செப்டம்பர் 10, 2008 @ 12:06 பிற்பகல் | பதில்

  5. நானும் எனது பல பதிவுகளைத் திருட்டுக் கொடுத்துவிட்டு நிற்கிறேன்.
    http://rishanshareef.blogspot.com/2008/07/blog-post.html
    இதில் பாருங்கள்.
    இதன் பின்னூட்டங்களில் இம்மாதிரியான பதிவுத் திருட்டைத் தடுக்க நல்ல வழிமுறைகளை நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    Comment by எம்.ரிஷான் ஷெரீப் — செப்டம்பர் 10, 2008 @ 1:15 பிற்பகல் | பதில்

  6. \\\\யாராவது புதிய ஆளாக இருப்பார்கள்! சொல்லிப் பாருங்கள் திருந்த வாய்புண்டு ‍‍

    ‍ வால்பையன் ////

    நன்றி.

    ==============================================================

    \\\\உங்கள் பதிவுகள் திருடப்படுகின்றது என்றால் நீங்கள் வலைப்பதிவுலகில் மிகவும் பாப்புலர் ஆகிவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம். இதில் கவலைப்படவேண்டாம் என்பது எனது சொந்தக் கருத்து.////

    சரிதான். இருந்தாலும் திருட்டுக் கொடுத்தவனுக்கு நட்டம், வருத்தம் வருவதும் இயல்புதானே, அந்த ஆற்றாமை தான்.

    ==============================================================

    நன்றி ரிஷான். இது குறித்த உங்களது பதிவில் நான் ஏற்கனவே மறுமொழிந்துள்ளேன்.

    Comment by கடுகு — செப்டம்பர் 10, 2008 @ 6:52 பிற்பகல் | பதில்

  7. கடுகு ஐயா,

    நான் அந்த பதிவில் யாரும் நான் எழுதியது என யாரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காக நான் எந்த பதிவில் இருந்து எடுத்தேனோ, அதனுடைய சுட்டியை போட்டிருந்தேன். நான் எழுதியது இல்லை என தெளிவாக சிகப்பெழுத்துகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

    எனக்கு பின்னூட்டமிடும் நண்பர்கள் அனைவருக்கும், குறைந்த பட்சம் ஒரு நன்றியாவது சொல்வது என் பண்பு. என்னுடன் பழகிய நண்பர்கள் அனைவரும் நன்கு அறிவர். ஆனால் பதிவு திருடன் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது கொஞ்சம் மனவேதனையளித்தது. நான் அப்படிப்பட்டவன் அல்ல. நான் மிகவும் யோசித்து யோசித்து பின் தான் பதிந்தேன்.

    உங்களுடைய பின்னூட்டத்தை நான் பார்க்கவில்லை. அது spamல் இருந்திருக்கிறது. இப்போது நான் வெளியூரில் இருப்பதால், இது பற்றிய என் தன்னிலை விளக்கத்தை விளக்கமாக என் பதிவில் எழுதுகிறேன்.

    பொறுங்கள்.

    Comment by veyilaan — செப்டம்பர் 10, 2008 @ 8:48 பிற்பகல் | பதில்

  8. \\\\ உங்களுடைய பின்னூட்டத்தை நான் பார்க்கவில்லை. அது spamல் இருந்திருக்கிறது. இப்போது நான் வெளியூரில் இருப்பதால், இது பற்றிய என் தன்னிலை விளக்கத்தை விளக்கமாக என் பதிவில் எழுதுகிறேன். – veyilaan ////

    வெயிலான் : முதலில் என் பதிவை நன்றாக படியுங்கள். உங்களை நான் பதிவுத் திருடன் என்று சொல்லவில்லை.

    Comment by கடுகு — செப்டம்பர் 10, 2008 @ 9:11 பிற்பகல் | பதில்

  9. எனக்கும் இதேபோல் போவர்ட் மெயில்லி வந்ததை பதிவில் ஏற்றிவட்டபிறகு பின்னுட்டங்களில் அது வெட்டிப்பல் என்பவரின் பதிவிலிருந்து சுட்டு அனுப்பிய்ருக்கிறார்கள் என தெரிய வந்தது. பின்னர் நான் அவரிடம் உடனேயே இதுபற்றி சொல்லிவிட்டேன். அந்தவிடயம் எனக்கு சரி சங்கடமாக போய்விட்டது. பிறகு போவர்ட் மெயில்லில் வருவதை படிப்பதோடு நிறுத்திக்கொண்டேன்.

    காப்பி பண்ணி அனுப்புவபர்கள் உண்மையில் சோர்ஸ் எங்கேயிருக்குனு போட்டு அனுப்பறது நல்லது.
    ஆனா அவங்களுக்கு உங்களைப்போன்றவரின் வலிகள் தெரிந்திருக்காது என்னதே வேதனை.

    Comment by சுபாஷ் — செப்டம்பர் 10, 2008 @ 10:52 பிற்பகல் | பதில்

  10. திரு. கடுகு வலைபதிவை காப்புரிமை பெற ஏதாவது வழி இருக்கிறதா? ஏனென்றால் நம்முடைய பதிவுகளை திருடினாலும் பரவாயில்லை. திரித்து எழுதுவிட்டார்கள் என்றால் என்ன செய்வது? அதுமட்டுமா நம்மையே திருடர்கள் என்றுவிட்டாலோ? காப்புரிமை குறித்த தகவல் தெரிந்தால் மறக்காமல் எனக்கு தெரியப்படுத்துங்கள். எனக்கு பெரும் உதவியாக இருக்கும். நன்றி.

    Comment by அறிவகம் — செப்டம்பர் 11, 2008 @ 1:54 பிற்பகல் | பதில்

  11. \\\\ வலைபதிவை காப்புரிமை பெற ஏதாவது வழி இருக்கிறதா? ஏனென்றால் நம்முடைய பதிவுகளை திருடினாலும் பரவாயில்லை. திரித்து எழுதுவிட்டார்கள் என்றால் என்ன செய்வது? அதுமட்டுமா நம்மையே திருடர்கள் என்றுவிட்டாலோ? = அறிவகம் ////

    ச‌ரியாக‌ சொன்னீர்க‌ள். எம்ஜிஆர், சிவாஜி ப‌ற்றி ஜெய‌மோகன் யதார்த்தமாக (அப்படித்தான் எனக்குத் தோன்றியது) எழுதிய‌தை எப்ப‌டி ஊதிப் பெரிதாக்கினார்க‌ள்.....

    வ‌லைப்ப‌திவு த‌லைப்புக்கு காப்புரிமை/ப‌திவுரிமை ஏதாவ‌து பெற‌ வ‌ழியிருக்கும். வலையில் இடுவதற்கு எல்லாம் காவலிருக்க இயலாது. திருட‌ர்க‌ளாக‌ப் பார்த்து திருந்த‌ வேண்டும். இருந்தாலும் எரிச்ச‌லைக் கொட்டித்தான் தீர்க்க‌ வேண்டியிருக்கிற‌து.

    ந‌ன்றி அறிவ‌க‌ம்

    =============================================

    \\\\ காப்பி பண்ணி அனுப்புவபர்கள் உண்மையில் சோர்ஸ் எங்கேயிருக்குனு போட்டு அனுப்பறது நல்லது.

    ஆனா அவங்களுக்கு உங்களைப்போன்றவரின் வலிகள் தெரிந்திருக்காது என்னதே வேதனை ////

    ந‌ன்றி சுபாஷ்

    Comment by கடுகு — செப்டம்பர் 11, 2008 @ 4:37 பிற்பகல் | பதில்

  12. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகாரனுக்கும் இன்னும் எல்லை தகாராறு உள்ளது..எங்கே பெங்களூரில் உள்ள அவர்கள் மேல் கைவைக்க சொல்லுங்கள் பார்போம் வாலை ஒட்ட நறுக்குவார்கள்..

    இந்த பால்தக்கரேவும் தான் மும்பையில் தமிழரை தாக்கினான் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது ‘இந்தி’ய அரசு? இன்றும் பத்திரமாகத்தான் உள்ளான் இவ்வாறானவர்களை சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி இருந்தால் இந்த இந்திய தேசத்தை பாராட்டலாம்.. இதுவரை தமிழன் எத்தனை மாநிலங்களில் கலவரத்தை தூண்டினான்? காரணமின்றி யாரையாவது அடித்திருக்கிறானா?மலையாளி கண்ணகி கோட்டம் என்னுடையது என்கிறான்.. கொல்டி பாலாற்றின் குறுக்கே அணைகட்டிகிறான்.. என்ன செய்ய முடிகிறது நம்மால்?

    இந்த மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்..இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்?

    பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு? சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான். சில மாதங்களுக்கு முன்பு லெபனானில் அவதிப்பட்ட இலங்கைச் சிங்களவர்களுக்கு இலவச விமானம் அனுப்பி ஏற்றி இறக்கிய இந்தியா குவைத்தில் அவதிப்படும் தமிழர்களை மட்டும் உணவுக்குக் கூடப் பிச்சை எடுக்க விட்டிருப்பதன் காரணமென்ன, அவர்கள் தமிழர்கள் என்பதாலா?

    இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்

    இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.

    அதாவது ஏனைய பொருளாதார வளங்களுக்கே தமிழரும் தமிழ்நாடும் தேவை படுகிறாரகள்..
    அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் “இந்தி”ய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையே “இறக்குமதி” வரியை விதித்துக் கொள்ளையடிப்பதை என்னசொல்ல?

    மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக தெருத்தெருவாய் அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் “இந்தி”யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைவரும்தான் என உணர வேண்டும்

    இதுவரை எனைய தமிழர் நலம் சார்ந்த வெளிவிஷயங்களில் இதுவரை இந்தியா தலையிட்டதிலை அது மலேசிய பிரச்சனையாக இருந்தாலும் சரி ..குவைத் தமிழர்கள் பிரச்சனையாக இருந்தாலும் சரி!
    எங்கோ சரந்தீபு சிங்கு தூக்குதண்டனைக்கு தாம் தூம் என்று குதிக்கும் இந்திய அர்சு இதுவரை தமிழக தமிழர்களுக்காக குதிதது உண்டா?சிந்தித்து பாருங்கள்..மராட்டியர்களின் இன உணர்வில் கால் பங்கு கூட இல்லையா தமிழனுக்கு? கொஞ்சம் வராலாற்றை எடுத்து புரட்டி பாருங்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடிய இனங்களே வாழ்திருக்கின்றன..

    ஈழதமிழர்கள் செய்வது ஒன்றும் தவறான விஷயம் அல்ல.. தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலும் ஈழத்தில் இருந்தாலும் இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைப் பகைவர்களாகவே கருதுகிறது. விடுதலைப் புலிகள் இந்திய அரசுக்குத் திரும்பத் திரும்ப நேசக்கரம் நீட்டுகிறார்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசாகச் செயல்படத் துணைபுரிவோம், இந்திய தேசிய இறையாண்மைக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று கூட உறுதி தருகிறார்ச்கள். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை வீழ்த்தவே முனைகிறார்கள். இது தீராத ஆரிய-தமிழ் இனப்பகையின் வெளிப்பாடு.

    நமக்காக குரல் கொடுக்க ஒரு நாடு கட்டாயம் வேண்டும்.. நம் குரல் ஐ.நா. சபையில் எழுப்ப படும்..
    அப்போதுதான் தமிழர்களுக்கு கொடுமை செய்யும் எனைய நாடுகள் இந்தியா உட்பட தனது கொட்டத்தை அடக்கும்..
    புரட்சியை வெளியில் தேடாதே!! அது உன் உள்ளத்திலேயே உள்ளது!–லெனின்

    Comment by பெயரிலி — செப்டம்பர் 14, 2008 @ 12:10 மு.பகல் | பதில்

  13. அய்யா மேல் அனுப்பி இருக்கும் கட்டுரை எப்படி இணைப்பது?எப்படி பிளாக்கு தொடங்கவேண்டும்? தங்களுக்கு பிடித்து இருந்தால் தமிழ்தேசியன் என்ற பெயரில் போட்டு தமிழ்மணத்தில் வருமாறு செய்யவும்..

    Comment by தமிழ்தேசியன் — செப்டம்பர் 14, 2008 @ 1:17 பிற்பகல் | பதில்

  14. \\\\ அய்யா மேல் அனுப்பி இருக்கும் கட்டுரை எப்படி இணைப்பது?எப்படி பிளாக்கு தொடங்கவேண்டும்? தங்களுக்கு பிடித்து இருந்தால் தமிழ்தேசியன் என்ற பெயரில் போட்டு தமிழ்மணத்தில் வருமாறு செய்யவும்..

    தமிழ்தேசியன் ////

    http://ta.wordpress.com / http://blogger.com சென்று ஒரு புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.

    http://www.kadugu.com/tc.html ஐ பயன்படுத்தி தமிழில் தட்டச்சி காப்பி பேஸ்ட் செய்து போஸ்ட் செய்யலாம்.

    http://www.tamilblog.in/blogs/what-is-a-blog/

    http://www.google.de/search?q=தமிழில்%20பிளாக்%20எழுதுவது

    மேலும் பல கருவிகள் கிடைக்கின்றன. மிக‌ விள‌க்க‌மாக‌ சில‌ர் எழுதியுள்ள‌ன‌ர்.

    மேல் அனுப்பி இருக்கும் க‌ட்டுரை என்று நீங்க‌ள் சொல்வ‌து என் க‌ட்டுரையையா அல்ல‌து அடையாள‌மிலியின் ம‌றுமொழியா என்று புரிய‌வில்லை. (அடையாள‌மிலி நீங்க‌ளாக‌வுமிருக்க‌ வாய்ப்பிருக்கிற‌து)

    நன்றி

    Comment by கடுகு — செப்டம்பர் 14, 2008 @ 1:42 பிற்பகல் | பதில்

  15. COPYSCAPE மூலம் உங்கள் பதிவுகளை பாதுகாகலாம்.
    கீழ்காணும் சூட்டிய அழுத்துவதன் மூலம் மேலதிக தகவள் பெற முடியும்

    http://yarl.wordpress.com/2009/05/09/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/

    Comment by yarl — ஆகஸ்ட் 12, 2009 @ 4:10 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.