எட்டு - எண்களில் எனக்கு பிடிக்காத ஒரே எண். இது எனக்கு மட்டும் இல்லாமல் பலருக்கும் ஆகாத எண். கூட்டுத்தொகை எட்டு, எட்டாம் எண் வீடு என பல ஆகாத எட்டுகள் உண்டு. அரசாங்கமே வாகனங்களுக்கு எட்டாம் எண் கூட்டுத் தொகை வரும் பதிவெண்களை கேட்டாலொழிய வழங்குவதில்லை. (ஆனால், ஓட்டுனர் உரிமம் எடுக்கப் போனால் வலுக்கட்டாயமாக எட்டு போடச் சொல்கிறார்கள். இது என்ன நியாயம்?)
எட்டப்பன், எட்டுக்கால் பூச்சி எனப் பல வேண்டாத எட்டுகள் இருக்கின்றன. படிக்கும் போது கூட எட்டுத்தொகையெல்லாம் நான் படித்ததே இல்லை.
இதையெல்லாம் விடுங்கள், வியாதியிலேயே மோசமான, கேவலமான வியாதிக்கு ‘எய்ட்’ஸ் என்று பெயர் வைத்திருக்கிறான் பாருங்கள், வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான். என்ன மாதிரி நியூமராலஜி பார்த்திருக்கிறான் பாருங்கள்.
சரி இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா? இன்று எட்டாம் தேதி, எட்டாம் மாசம் எட்டாம் வருஷம். 8-8-8. அதான் ஒரு ஞாபகார்த்த பதிவு.
அதென்னமோ, “இன்று தேதி 8-8-8, இரவு எட்டு மணி எட்டு நிமிடத்திற்கு எய்ட்ஸ் நோயால் செத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், செல்போனைக்கூட அமைதியாக்கவும்” இப்படி எல்லாம் குறுஞ்செய்தி வரவில்லை. இனிமேல் வருமோ என்னவோ தெரியவில்லை………..
பி.கு.: இந்த பதிவு குறித்த தொடுப்பு/மின்னஞ்சலை குறைந்தது எட்டு பேருக்காவது அனுப்பி புண்ணியம் தேடிக் கொள்ளவும்.
தாய் “எட்டு” அடி பாய்ந்தால் சேய் “பதினாறு” அடி பாயும் என்று பழமொழி இருக்கிறதே. ஈரெட்டு பதினாறு என்பதால் தான் பிள்ளைக்கு அடி படுகிறதோ? என்னதான் சொன்னாலும் நீங்கள் சொல்ல வந்த கருத்து மக்களை “எட்ட” மாட்டேன் என்கிறதே!
Comment by Expatguru — ஆகஸ்ட் 8, 2008 @ 2:28 பிற்பகல் |
thank god you did not go into the `great’ song – declared as poetry, that divides life into eight and is mouthed by none other than rajini.
high eights!
Comment by rudhran — ஆகஸ்ட் 8, 2008 @ 3:47 பிற்பகல் |
sorry. give me a month and i will type intamil
Comment by rudhran — ஆகஸ்ட் 8, 2008 @ 3:47 பிற்பகல் |
நன்றி, ருத்ரன், ExpatGuru.
Comment by கடுகு — ஆகஸ்ட் 8, 2008 @ 4:21 பிற்பகல் |
08.08.08இரவு 8 மணிக்கு 8 நிமிடம் மின்சாரத்தை திறுத்தி புவி வெப்பமயமாகுதலை தடுக்க உதவுமாறு எக்ஸ்னோரா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Comment by velarasi — ஆகஸ்ட் 8, 2008 @ 5:45 பிற்பகல் |
நன்றி வேளராசி.
Comment by கடுகு — ஆகஸ்ட் 12, 2008 @ 6:17 பிற்பகல் |