கடுகு

ஜூலை 17, 2008

பூமி அழியப் போகிறது…. ஒளிமின் / ஒழிமின்… (2)

இதன் முன்கதையை இங்கு படிக்கலாம்….

சுருக்கமா…. 2012ல ஒரு கிரகம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில வரும்போது பூமி அழிஞ்சுடுமாம். அப்டி அழியப் போறது உறுதியாகிட்டா என்னவெல்லாம் நடக்கலாம்னு கற்பனை…..

கமலஹாசன் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “கெளரவர்கள்”. நூறு வேடங்களில், திரைப்படத்தின் கதாநாயகி உட்பட அனைத்துக் கதாபாத்திரங்களையும் கமல் ஏற்று நடிக்கிறார். இத் திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு பூமியில் மோத‌விருக்கும் கிர‌க‌த்தை கமல்ஹாசன் அழிக்கும் க‌தையே ‘கெள‌ர‌வ‌ர்கள்’ என்று இத்திரைப்படத்தை தயாரிக்க இருக்கும் பாஸ்க‌ர் பிலிம்ஸ் நிறுவ‌ன‌ம் தெரிவித்துள்ள‌து.

கருணாநிதி குடும்பத்தினர் சுமார் நூறு விண்வெளி ஓடங்களில் 2012 அழிவுக்குள் பூமியிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி. நாஸாவுடன் ரகசிய பேச்சு வார்த்தை அம்பலம்…… தயாநிதி மாறனை ஓடத்தில் ஏற்றுவதில்லை என்று கலைஞர் திட்டவட்டமாக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

செம்மொழியாம் தமிழைக் காக்கவே செவ்வாய் கிரகத்திற்கு பயணம்.   இந்தி எதிர்ப்பு செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி போன்ற எல்லா கிரகங்களிலும் தொடரும். மேற்கண்ட அனைத்து கிரகங்களிலும் வறுமையை ஒழிப்பேன் – கருணாநிதி

குடும்பத்தினரோடு த‌ப்பிச் செல்ல‌ அர‌சு செல‌வில் விண்வெளி ஓட‌ங்க‌ளை வாங்க‌ க‌ருணாநிதி முய‌ற்சிக்கிறார் ‍ ஜெய‌ல‌லிதா குற்ற‌ச்சாட்டு.

பூமியில் நிபிரு மோத வருவதற்கு முக்கிய காரணம் இந்தியர்கள் தான் – ஜார்ஜ் புஷ் குற்றச்சாட்டு

எந்த‌ கிர‌க‌த்திற்கு சென்றாலும் ரோமிங்கில் தொட‌ர்பு கொள்ளும் வ‌ச‌தியுடைய‌ சிம் கார்டு - ஏர்டெல் அறிமுக‌ப்ப‌டுத்துகிறது.

நிபிரு மோதலை முறியடிப்பது எப்படி – தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை.

பெண்கள் மனங்கவர்ந்த தொலைக்காட்சித் தொடர்களான மச்சினி, கொழுந்தியாள், நாத்தனார் ஆகியவை 2012க்கு பிறகு அனைத்து கிரகங்களிலும் தெரியும். இதற்கான ஒளிபரப்பு சனி கிரகத்திலிருந்து தொடரும் ‍ சனி சன் டிவி குழுமம்.

தினமலர், தினத்தந்தி, குமுதம் சோதிடம், ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் சில இலவச இணைப்புகள்.

நிபிரு பெயர்ச்சி பலன்கள்
நிபிரு மோதல் பலன்கள்
செவ்வாய் போன்ற பிற கிரகங்களில் வாஸ்துவும், ராசி பலன்களும்

நிபிரு மோத இருப்பதை முதலில் அறிவித்தது நானே – ராகவா முனிவர்

அழிவிலிருந்து ஏசு ரட்சிக்கிறார். பேரின்பத் திருவிழா, இடம்: தீவுத்திடல் -  சகலை வால் மனோகரன் அழைக்கிறார். (எத்தனை நாள்தான் ச‌கோத‌ர‌ர்னு சொல்வாங்க‌)

நபிகள் காட்டும் நிபிரு – வின் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி

கடுகு.காம்…….. www.kadugu.com

5 மறுமொழிகள் »

  1. எந்த கிரகத்துக்கு சென்றாலும் மனிதர்களை பாதுகாக்க(?) பேரழிவு அணுஆயுதங்களை கொண்டுவருவோம் கவலைவேண்டாம்., ஜார் மன்னிக்கவும் எல்லாநாட்டு புஷ்களும் அறிவிப்பு. இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றி.

    Comment by arivakam — ஜூலை 18, 2008 @ 10:10 பிற்பகல் | பதில்

  2. Comment by cccc — ஜூலை 31, 2008 @ 12:53 பிற்பகல் | பதில்

  3. nalla karpanai

    Comment by subra — மார்ச் 27, 2009 @ 8:58 பிற்பகல் | பதில்

  4. very good imagination

    Comment by subra — மார்ச் 27, 2009 @ 8:59 பிற்பகல் | பதில்

  5. ஹாஹாஹஹா

    கலக்கல் சிந்தனைகள் கடுகு..

    Comment by tamil friends — ஆகஸ்ட் 5, 2009 @ 2:49 மு.பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.