கடுகு

ஜூலை 8, 2008

சென்னை செந்தமிழ் அகராதி 9

கபோதி
கண்பார்வை அற்றவன், அறிவிலி

வலி, வலித்தல்
இழு, இழுத்தல், இழுவை

‘அத்த புட்ச்சி வலி’ என்பது அதைப் பிடித்து இழு என்பதாகும். காக்கா வலிப்பு அல்லது காக்கை வலிப்பு என்பதன் சொற்பொருள் எல்லோருக்கும் தெரியும். கால் கை வலிப்பு இப்படி மருவியது என்பர். வலிப்பு என்பதற்கு இழுவை, இசிப்பு என்று பொருள். இசிப்பு நோய் என்பது வலிப்பு அல்லது இழுவை நோயைக் குறிக்கும்.

உஷார் (மூலம்: உருது)
கவனம், ஜாக்கிரதை

உதார்
பெரியவன், கொடையாளி, ஆதார‌ம்

பெரிய ஆளாகவும், எல்லாம் தெரிந்தவனாகவும் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒருவனை ‘உதார் காட்டறான் பாரு’ என்பர். கொடைக்குண‌மான‌து உதார‌குண‌ம் என‌ச் சுட்ட‌ப்ப‌டுகிற‌து.

எச்சக்கலை
‘எச்சிலுக்கு அலையும்’ (எச்சிற்கு அலையும்) என்பது வழக்குப் பொருள்

கோதா (உருது : கோதா)
சண்டையில் இறங்குதல்

கோதா என்னும் உருது சொல்லுக்கு மல்யுத்த களம் என்று பொருள். கோதாவில் இறங்குதல் என்றால் களத்தில் இறங்குதல் என்று பொருள் வரும்.

கெத்து
கொக்கரிப்பு, தைரியம், பிளத்தல்

தற்பெருமை அடித்துக் கொள்ளும் ஒருவனைப் பற்றியோ, தன் நிலையில் வலுவாக இருப்பவனைப் பற்றியோ பயன்படுத்தப்படும் சொல் இது. ‘எப்டி கெத்தா கீறான் பாரு’ என்று தைரியமாக இருக்கும் ஒருவன் குறிக்கப்படுவது வழக்கம்

சோக்கு, ஷோக்கு (உருது : ஷோக்)
ஆடம்பரம்

கப்சா (உருது)
பொய்

கெலிப்பு
வெற்றி.

தெலுங்கிலிருந்து வ‌ந்த‌தாக‌ கூற‌ப்ப‌டும் சொல் இது.

முந்தைய பதிவுகள்…..

http://kadugu.wordpress.com/category/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d/

கடுகு.காம்…….. www.kadugu.com

4 மறுமொழிகள் »

  1. இதோ இன்னும் சில..

    பாடு (bhadu) – உதவாக்கரை
    மெர்ஸல் – பயம்

    Comment by nithil — ஜூலை 9, 2008 @ 5:00 பிற்பகல் | பதில்

  2. \\பாடு (bhadu) //

    ஏற்கனவே எழுதியாகிவிட்டது. நன்றி.

    Comment by கடுகு — ஜூலை 9, 2008 @ 5:39 பிற்பகல் | பதில்

  3. ஏதோ திரைப்படத்தில் விவேக் கூட்டணியினர் யாழ் தமிழை சென்னை தமிழுக்கு மொழிபெயர்த்திறுப்பர். நீங்களும் முயற்சி செய்யுங்களேன். வாழ்த்துக்கள்.

    நித்தில்

    Comment by nithil — ஜூலை 10, 2008 @ 1:31 பிற்பகல் | பதில்

  4. \\\\ஏதோ திரைப்படத்தில் விவேக் கூட்டணியினர் யாழ் தமிழை சென்னை தமிழுக்கு மொழிபெயர்த்திறுப்பர். நீங்களும் முயற்சி செய்யுங்களேன்////

    பார்த்தேன், அது ரொம்ப கொடுமை. யாழ் தமிழ் கொஞ்சம் உருப்படியாக இருக்கிறது. அதிலும் கை வைத்தால், இன்னும் மோசமாகி விடும் என்று நினைக்கிறேன் நித்தில்.

    நன்றி.

    Comment by கடுகு — ஜூலை 10, 2008 @ 4:31 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.