கடுகு

மே 13, 2008

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் அழுகை...

சில நாட்கள் முன்பு ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கி அழுத ஸ்ரீசாந்த் மீண்டும் அழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று போட்டி துவங்கும் முன் கிரிக்கெட் வீரர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பக்கத்தில் இருந்த ஒரு சக வீரர் ஸ்ரீசாந்தின் தட்டில் இருந்த வடையை நைசாக திருடி விட்டதாகத் தெரிகிறது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டதில் ஸ்ரீசாந்துக்கு இடதுபுறம் இருந்தவர் திருடினாரா அல்லது வலதுபுறம் இருந்தவர் திருடினாரா என்று ஸ்ரீசாந்துக்கு தெரியவில்லை.

தனது வடை திருடப்பட்டதை அறிந்த ஸ்ரீசாந்த் கேன்டீனிலேயே அழ ஆரம்பித்து விட்டார். சக வீரர்கள் அவரைத் தேற்ற வேறு ஒரு வடையை கொடுத்தனர். ஆனால் திருடப்பட்ட அதே வடை வேண்டும் என்று ஸ்ரீசாந்த் தேம்பித்தேம்பி அழுதார்.

கேன்டீனிலிருந்து மைதானம் வரை அழுது கொண்டே வந்த ஸ்ரீசாந்த் தொலைக்காட்சியில் தனது முகம் தெரியும் வரை அழுதார். முதலில் பந்து வீசிய அவர் பந்தில் எச்சிலுக்கு பதில் கண்ணீரையே தோய்த்து வீசினார்…..

ஸ்ரீசாந்துக்கு குவியும் ச‌லுகைக‌ள், ஆதரவு

ஸ்ரீசாந்த் இனி போட்டிகளில் கலந்து கொள்ள‌ச் செல்லும்போதெல்லாம் அவரை ஆறுதல்படுத்த‌ அவ‌ர‌து அம்மாவும் உட‌ன் செல்ல‌ விமான‌ டிக்கெட் த‌ர‌ப்ப‌டும் என்று ஐபிஎல் நிறுவ‌ன‌ம் தெரிவித்துள்ள‌து.

புக‌ழ்பெற்ற‌ ரேம‌ண்ட்ஸ் துணி நிறுவ‌ன‌ம் ஸ்ரீசாந்துக்காக‌ அதிக‌ ஈர‌ம் உறிஞ்சும் த‌ன்மையுள்ள‌ கைக்குட்டைக‌ளை ஸ்பான்ச‌ர் செய்வ‌தாக‌ அறிவித்துள்ளது.

பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஸ்ரீசாந்துக்கு பத்து ஆண்டுகளுக்கு தேவையான டெடி பியர் பொம்மைகளை இலவசமாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அகில உலக மலையாளிகள் சமாஜம் ஸ்ரீசாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. உலகெங்கும் அனைத்து டீக்கடைகளையும் மூடி போராட்டம் நடத்தவிருப்பதாக மலையாள சமாஜத் தலைவர் தெரிவித்தார்.

இந்திய‌ குழந்தைத் தொழிலாள‌ர் த‌டுப்பு அமைப்பு ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்ப‌தாக‌ செய்திக‌ள் கூறுகின்ற‌ன‌.

கடுகு.காம்…….. www.kadugu.com

===========

9 மறுமொழிகள் »

  1. ஸ்ரீசாந்த் எல்.கே.ஜி படிச்சிக்கிட்ருக்கற ஸ்கூல்லேந்து எந்த கண்டணமும் வரலியா?

    Comment by vijaygopalswami — மே 13, 2008 @ 7:23 மு.பகல் | பதில்

  2. அய்யய்யோ நீங்க இப்படி ஒரு பதிவு போட்டது தெரிஞ்சா அதுக்கும் வேற அழுது தொலைசிடப் போறார்.

    Comment by mohan raam — மே 13, 2008 @ 12:53 பிற்பகல் | பதில்

  3. மொக்க‌ ஒவர். மலயாளிங்கன்னா அப்பிடி என்ன வெருப்பு உங்களுக்கு. நானும் மள்ளு தான்.

    Comment by bhuvana — மே 13, 2008 @ 5:52 பிற்பகல் | பதில்

  4. ஆண்கள் பொது இடங்களில் அழக்கூடாது என்பது கூட ஒருவகையில் ஆணாதிக்கச் சிந்தனை தான் !!!

    Comment by சேவியர் — மே 14, 2008 @ 10:51 மு.பகல் | பதில்

  5. \\\\ஆண்கள் பொது இடங்களில் அழக்கூடாது என்பது கூட ஒருவகையில் ஆணாதிக்கச் சிந்தனை தான்////

    இருக்கலாம்.

    அவர் வாங்கிய அறையால் விளைந்த ‌வலி காரணமாக அழுதிருந்தால் சில சொட்டுக்களுக்கு மேல் கண்ணீர் வந்திருக்காது. சில சமயங்களில் அடக்க முடியாமல் இப்படி அழ நேரிடும். கடும் துக்கம், பேரிழப்பு, தாங்க முடியாத அவமானம், இயலாமை, கோபம் ஆகிய சில சந்தர்ப்பங்களில்.

    பொதுவாக‌ இவர் இப்படி அழுதிருக்கத் தேவையில்லை, இவர் என்ன குழந்தையா? இது போன்ற நடப்புகளைக் கூட எதிர் கொள்ள முடியாத அளவு, பக்குவமில்லாத மன நிலையே இதற்குக் காரணமாயிருக்க முடியும்.

    Comment by கடுகு.காம் — மே 14, 2008 @ 11:03 மு.பகல் | பதில்

  6. nice humour.

    are you mr.rangarajan?

    Comment by vijayarajan — மே 14, 2008 @ 8:23 பிற்பகல் | பதில்

  7. வாயுத் தொல்லையா? நிவாரனம் வேண்டுமா? தவறாமல் படியுங்கள்:

    http://vijaygopalswami.wordpress.com/2008/05/17/gas_trouble/

    Comment by vijaygopalswami — மே 17, 2008 @ 11:27 மு.பகல் | பதில்

  8. mallu endraal yaarukkum veruppu illai. neengal ketkum muthal vaarthaye “neengal malayaliya”.

    Comment by natarajan — ஆகஸ்ட் 21, 2008 @ 4:35 பிற்பகல் | பதில்

  9. sree sanththa paththi yarum thappa sollakkudathu please yen eppadi pesuringa
    ungalukku avara pidikkavillai enral avara paththi pesakudathu ethu anakarikamma theriyala yen sree santh tha paththi eni yarum thappa pesakkudadu

    Comment by kavitha — பெப்ரவரி 10, 2009 @ 4:46 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.