அபீட்
தப்பித்தல், தப்பி ஓடுதல்
‘அபீட் ஆகிட்டான், நான் அபீட்டுப்பா’ போன்றவற்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘தப்பிச்சேன்’ என்பது போன்ற பொருள் தரும் இச்சொல். இதன் மூலம் ஆங்கிலம். Offbeat or Abate என்பதே. Offbeat என்ற ஆங்கிலச் சொல்லுக்கு Way-Out, Escape, தப்பிச் செல்லல் என்பது பொருள். ‘எஸ்கேப் ஆவது, தப்பிப்பது’ என்ற பொருளிலேயே ‘அபீட்’ பயன்படுத்தப்படுகிறது. (சில நேரங்களில் ‘இறந்து விட்டான்’ என்பதைக் கூட ‘அபீட் ஆயிட்டான்’ என்று சொல்வதுமுண்டு. Abate – Die away)
அலக், அலேக் (மூலம் : உருது அலக்)
தனியாக (தனித் தனியே பிரித்தல்)
இந்தி, உருதுவில் அலக் அலக் என்ற சொல்லை ‘தனியாக’ என்ற பொருளில் பயன்படுத்தக் காணலாம். ‘அலேக்கா தூக்கு’ என்பதற்கு ‘தனியாக பிரித்து தூக்குதல்’ என்று பொருள்.
தமிழில் உள்ள அலகு (Unit) என்ற சொல்லுக்கு ‘தனியொரு பகுதி’ என்று பொருள். இதை இச்சொல்லுடன் தொடர்புபடுத்தினால் அருமையான சொற்கிளவி கிடைக்கும்.
அலகு+அலகு+ஆன = அலகலகான.