கடுகு

ஏப்ரல் 21, 2008

ஜெயலலிதா வீட்டு வாசலில் கலைஞர்....

கோப்பு வகை: நையாண்டி விலாஸ் — கடுகு @ 7:01 பிற்பகல்
Tags: , ,

சென்னை, ஏப். 21: ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பில் உள்ள தனக்கு மாநில அரசு அளிக்கும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. விடுதலைப்புலிகள், தமிழ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

சுமார் இருப‌து கோரிக்கைக‌ள் அட‌ங்கிய‌ அவ‌ர‌து ம‌னுவில் உள்ள பெரும்பாலான‌ கோரிக்கைக‌ளுக்கு இங்கு தீர்வுக‌ள் அளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌….

தமிழ் தீவிரவாதிகள் அமைப்புகளிடமிருந்து ஈ-மெயிலில் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது. எனவே அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அவசியம்.

இதெல்லாம் ஒரு பிர‌ச்சினையாங்க‌…. அடிக்க‌டி ஈ‍‍‍மெயில் ஐடி மாத்துங்க‌. யாஹூ, ஹாட்மெயிலு, ஜிமெயிலுன்னு ஏக‌ப்ப‌ட்ட‌ இல‌வ‌ச‌ மின்ன‌ஞ்ச‌ல் சேவைக‌ள் கிடைக்குது…

2006, நவம்பர் 8-ம் தேதி ஒருவர் ஜெயலலிதா வீட்டின் மெயின் கேட்டில் வாகனத்தை மோதவிட்டு உள்ளே புக முயன்றார். 2007, அக்டோபர் 16-ம் தேதி மற்றொருவரும் உள்ளே புகுந்து வீட்டின் முதல் மாடி வரை சென்றுள்ளார்.

வூட்டை மாத்திருங்க‌.  அடிக்க‌டி வூடு மாறுங்க‌.  அப்போதான் வூடு யாருக்கும் தெரியாது.

குண்டு துளைக்காத பழைய அம்பாசிடர் காரை மாற்றிவிட்டு, நவீன கார் வழங்க வேண்டும். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகரரெட்டி, அம்மாநில முன்னாள் முதல்வர் என். சந்திரபாபுநாயுடு ஆகியோருக்கு குண்டு துளைக்காத ஸ்கார்பியோ மற்றும் டாடா சபாரி கார்கள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுகிறோம்.

பேசாம‌ நீங்க‌ ஆந்திராவுக்கே……………. ஹைத‌ராபாத்துக்கே போய் செட்டிலாயிடுங்க‌.  த‌மிழ் நாட்டுக்கும் ஒரு த‌லைவ‌லி நீங்கிடும்.

ஜாமர் கருவி மற்றும் வாக்கிடாக்கி (10 செட்) வசதி வேண்டும்.

10 செட்டா………. அதென்ன புரோட்டா செட்டா, சாதாரணமா சொல்லிட்டீங்க 10 செட்டுன்னு. ஆமா….. இன்னொண்ணு, அவ‌ன் அவ‌ன் செல்போன், ஜிபிஆர்எஸ், ஜிபிஎஸ் அப்பிடின்னு ஆயிர‌த்தெட்டு டெக்னால‌ஜிய‌ வ‌ச்சிக்கிட்டு அலையுறான், இன்னும் வாக்கி டாக்கி வேணும்கிறீங்க‌ளே….?

மோப்பநாய் பாதுகாப்பு வசதியை வீட்டிற்கு தர வேண்டும்.

அதெல்லாம் தர முடியாது. விக்கிற வெலைவாசியில நாய்க்கெல்லாம் பிஸ்கட் வாங்கிப் போட்டு க‌ட்டுப‌டியாகுமா…..

வீட்டு வாசலில் ஒரே ரத்த குரூப் உள்ளவர்களுடன் ஆம்புலன்ஸ் வசதி வேண்டும்.

இது சூப்ப‌ரு…… ஒரே ர‌த்த‌ குரூப் உள்ள‌வ‌ங்க‌ன்னா…. நீங்க‌, க‌லைஞ‌ர், ம‌ருத்துவர் ராமதாசு, வைகோ, திருமாவளவன் மாதிரி அர‌சிய‌ல்வாதிங்க‌ தான். நீங்க‌ எல்லாரும் ஒரே ர‌த்த‌ குரூப்தான். இவ‌ங்க‌ளையா ஒங்க‌ வூட்டு வாச‌ல்ல‌ ஆம்புல‌ன்சுல‌ ஒக்கார‌ வைக்க‌ணும்…… எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே………

பெட்ரோல் வாகனம் தரவேண்டும். டீசல் வாகனம் கூடாது.

பெட்ரோல் வெலை என்ன‌ தெரியுமா ஒங்க‌ளுக்கு?……. நா பெட்ரோல் வெலை ஏறின‌தில‌ இருந்து, பெட்ரோல் பங்க்லே காத்த‌டிக்க‌றவ‌னுக்கு ரெண்டு ரூவா டிப்ஸ் குடுக்க‌ற‌த கூட நிறுத்திட்டு பொயப்ப ஓட்டிகினுகீறேன்.

வீட்டில் நவீன காமிராக்களைப் பொருத்த வேண்டும். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கியுள்ளது போல் 189 போலீசார் கொண்ட முழு பாதுகாப்பு, சென்னை நகர ஆயுதப்படையின் கமாண்டோ பிரிவில் இருந்து நவீன ஆயதங்களை கையாளும் பயிற்சிபெற்ற 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 18 வீரர்கள் நியமிக்க வேண்டும்.

ஏற்க‌ன‌வே சொல்லியாச்சு…. திரும்ப‌த் திரும்ப‌ கேக்காதீங்க‌… பேசாம ஆந்திராவுக்கே போயிடுங்க‌. ச‌ந்திர‌பாடு நாயுடு அய்யா வூட்ல‌ ஒரு போர்ஷ‌ன் காலியா கீதாம். அங்க‌ போயிட்டீங்க‌ன்னா, வாடகை கொறைவு, பேச்சுத்துணையாவும் ஆகும், பாதுகாப்பு செல‌வும் எங்க‌ளுக்கு மிச்சம்.

கடுகு.காம்…….. www.kadugu.com
==========

9 மறுமொழிகள் »

  1. சிரிச்சி சிரிச்சி வயறு புண்ணாகிவிட்டது. நல்ல பதிவு…

    Comment by Karthik — ஏப்ரல் 22, 2008 @ 4:51 பிற்பகல் | பதில்

  2. நாரதா,

    நான் ஏதோ ஹைதராபத்ல நிம்மதியா இருக்கேன். என் நிம்மதிய கெடுக்கப் பாக்குறியே. இது உனக்கே நியாயமா. இத பார் எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். வன்முறை கூடாது சரியா. (இந்தம்மா ஒரு தடவை கேரளா போயிட்டு வந்ததுக்கே எத்தனை பேரு மண்டை உடைஞ்சிது. நீ என்னன்னா பெர்மெனண்ட்டா எங்க ஊருக்கு அனுப்புறேன்னு சொல்றே)

    Comment by vijaygopalswami — ஏப்ரல் 22, 2008 @ 7:27 பிற்பகல் | பதில்

  3. Kalakal comedy!

    Comment by Vivek — ஏப்ரல் 22, 2008 @ 10:04 பிற்பகல் | பதில்

  4. Hi, I would know how to publish in Tamil. I have changed my settings to Tamil, still when I try to create the post the font is in English. Sorry to post you with this question, which should be directed to helpdesk./FAQ. But if you could help, that will be great.

    Comment by Anand — ஏப்ரல் 23, 2008 @ 9:29 மு.பகல் | பதில்

  5. hah..hah…hahaaaa…..

    Comment by uumm — ஏப்ரல் 23, 2008 @ 9:47 மு.பகல் | பதில்

  6. \\\நாரதா,

    நான் ஏதோ ஹைதராபத்ல நிம்மதியா இருக்கேன். என் நிம்மதிய கெடுக்கப் பாக்குறியே. இது உனக்கே நியாயமா. இத பார் எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். வன்முறை கூடாது சரியா. (இந்தம்மா ஒரு தடவை கேரளா போயிட்டு வந்ததுக்கே எத்தனை பேரு மண்டை உடைஞ்சிது. நீ என்னன்னா பெர்மெனண்ட்டா எங்க ஊருக்கு அனுப்புறேன்னு சொல்றே)

    ////

    அடப்பாவிகளா.......ஒரு வழியா என்னைய நாரதன்னே முடிவு கட்டிட்டீங்களா........?

    Comment by கடுகு.காம் — ஏப்ரல் 23, 2008 @ 1:12 பிற்பகல் | பதில்

  7. கடுகு அண்ணா,

    நாரதா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது. நாரதர் போல நீயும் ஒரு திரிலோக சஞ்சாரி. அலைந்து திரிந்து பல தகவல்களைத் திரட்டி சென்னை செந்தமிழ் எழுதி வருகிறாய். ஆகவே இதை ஒரு பாராட்டாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    Comment by vijaygopalswami — ஏப்ரல் 23, 2008 @ 4:31 பிற்பகல் | பதில்

  8. //Hi, I would know how to publish in Tamil. I have changed my settings to Tamil, still when I try to create the post the font is in English. Sorry to post you with this question, which should be directed to helpdesk./FAQ. But if you could help, that will be great.///

    ஆனந்த்,

    வேர்ட்பிரஸ் செட்டிங்குகளை தமிழில் மாற்றுவதால் மட்டும் தமிழில் பதிவு எழுத முடியும் என்று தோண்றவில்லை.

    http://ezilnila.com/tane/unicode_Writer.htm

    மேலே உள்ள பக்கத்தில் நீங்கள் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் யூனிகோடில் தமிழ் வார்த்தைகளாக மாற்றித் தரும். மேலும் NHM Writer உள்ளிட்ட மென்பொருட்களும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. NHM Writer நிறுவிக்கொண்டால் இணைய இணைப்பு இல்லாதபோதும் உங்களால் தமிழில் எழுத முடியும். எழில் நிலா இணைய இணைப்பு இல்லாதபோது வேலைசெய்யுமா என்று தெரியவில்லை. நான் குறிப்பிட்டுள்ளவற்றைப் பயன்படுத்திப் பாருங்கள். வாழ்த்துக்கள்.

    Comment by vijaygopalswami — ஏப்ரல் 23, 2008 @ 4:39 பிற்பகல் | பதில்

  9. எழுத்துரு மாற்றி

    http://kadugu.com/downloads/Converter.zip

    Comment by கடுகு.காம் — ஏப்ரல் 23, 2008 @ 5:11 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.