செய்தி : சென்னை, 25-01-2008: டில்லியில், தமிழ் ஆட்சி மொழியாக ஆகும் வரை இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடரும். அதுவரை ஆங்கிலம் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும், என்று மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கக் கூட்டத்தில் கருணாநிதி முழங்கினார்.
தமக்குத்தாமே கேள்வி – பதில் பகுதியை எழுதி வெளியிடும் வித்தகருக்கு சில கேள்விகள்.
1. தமிழைக் காப்பதற்கு ஆங்கிலம் தேவை எனில், நீங்கள் எதற்கு? என்ன சாதிக்கப் போகிறீர்கள் ?
2. தமிழைக் காக்க அயல் மொழியான ஆங்கிலம் எதற்கு என விளக்க முடியுமா? அயல் மொழியான ஆங்கிலம் தமிழைக் காக்க உதவும் ஆனால் இந்தி உதவாது… இது தான் உங்கள் வாதமா? எனில் இது எந்த விதத்தில் சரி என விளக்கவும்………
3. தமிழகத்தின் சாராயக் கடைகள் (Tasmac) முதற்கொண்டு ஓடும் பேருந்துகள் (SETC, TNSTC), தேர்வாணையம் (TNPSC) என சகலத்துக்கும் இப்படி ஆங்கிலத்தையே சூட்டி பழக்கப்படுத்தி விட்டீர்களே?. உங்களின் வழக்கமான பதில் – முந்தைய ஆட்சியில் நடந்தது இது எனில் – நீங்கள் வந்து ஏன் இவற்றையெல்லாம் சீரமைக்கவில்லை?
4. கலைஞர் தொலைக்காட்சியை நீங்கள் பார்ப்பதுண்டா? அதில் தமிழின் பெருமை எங்கனம் கட்டிக் காக்கப்படுகிறது என உங்களுக்குத் தெரியுமா?
5. தமிழக அரசின் அதிகார்வபூர்வ இணைய தளத்தின் முகப்புப்பக்கம் (www.tn.gov.in – Homepage) ஏன் ஆங்கிலத்திலேயே இருக்கிறது?
6. வணிகங்கள் மற்றும் எவ்வித நிறுவனங்களின் முகப்பு பெயர்ப்பலகைகள் தமிழிலே கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டம் காலாவதியாகி விட்டதா? இல்லை எனில் சற்று ஊர்தியில் செல்லும் போது வெளியே (கண்ணாடியைக் கழற்றி விட்டு) பார்க்கவும்.
7. தமிழக நீதிமன்ற அளவிலேயே தமிழுக்கு இடமில்லாது ஆங்கிலம் நுழைந்து சீரழித்துக் கொண்டு இருப்பது உங்களுக்குத் தெரியாதா? இந்த இலட்சணத்தில் தமிழ் இருக்கும் போது இன்னும் டில்லியில் தமிழ் ஆட்சி மொழி அது இது என தமிழக மக்களுக்கு படம் காட்டுவது நியாயமா?
8. அடிக்கடி தாமே கேள்வி கேட்டு, பதிலும் தாமே எழுதி வெளியிடும் கலைக்காக நோபல் பரிசு தங்களுக்கு கிடைக்க தமிழக அரசே பரிந்துரைக்கப் போவதாகவும், பரிந்துரைக் கடிதத்தை எங்கே, யாருக்கு அனுப்புவது என்று தெரியாமல் அரசு அதிகாரிகள் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுவது மெய்யா?
9. தமிழ் நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் கேணையர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
இப்படிக்கு
கடுகு
[...] கலைஞருக்கு சில கேள்விகள்… « கடுகு.காம… [...]
வரு பிங்கு by நல்ல கேள்வியைக் கேட்பது எப்படி? « Snap Judgment — ஏப்ரல் 2, 2008 @ 8:13 மு.பகல் |
Good ones. But it is depressing to see even educated people are fooled by this kind of double-standard, hypocrite politicians with the name of language, race and religion. Keep posting.
Comment by Lakshminarayanan — ஏப்ரல் 4, 2008 @ 1:20 பிற்பகல் |
லக்ஷ்மி நாராயணன் அவர்களே, சரியாக சொன்னீர்கள். படித்தவர்களே மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம். இந்த லட்சணத்தில், படித்தவர்கள் அதிகம் இருப்பதால் தான் சென்னை தி.மு.க.வின் கோட்டை என்று சில ஆண்டுகள் முன்பு வரை மார் தட்டிக் கொண்டிருந்தார்கள். அதாவது படித்தவர்களின் ஆதரவைப் பெற்றவர்களாம் இவர்கள். தி.மு.க என்றில்லை எல்லா கட்சிகளும் ஒரே சாக்கடையின் பல கிளைகளே.
நன்றி
கடுகு
Comment by kadugu — ஏப்ரல் 4, 2008 @ 6:44 பிற்பகல் |
//தி.மு.க என்றில்லை எல்லா கட்சிகளும் ஒரே சாக்கடையின் பல கிளைகளே.//
100 சதவீதம் உண்மை. ஆனால் ஜனநாயகம் என்ற பெயரில் இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்துதானே ஆக வேண்டியுள்ளது. எந்த கட்சியின் மீதும் மக்களுக்கு நம்பிக்கையில்லாவிடில் தேர்தலைப் புறக்கணிக்கும் காலம் வர வேண்டும்.
Comment by Lakshminarayanan — ஏப்ரல் 5, 2008 @ 5:43 பிற்பகல் |